பெங்களூரில் தொழில் அதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகை யமுனா கைது செய்யப்பட்டார்.
பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரவிச்சந்திரன் நடித்த சின்னா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யமுனா. இதன்பின்னர் மாவனிகே தக்க அளியா, ஹெண்டத்தியரே உஷார் படங்களில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்து இருந்தார். மோடத மரேயல்லி என்ற படத்தில் நடித்தபோது யமுனா என்ற தனது பெயரை சவும்யா என்று மாற்றிக் கொண்டார். நடிகர் சிவராஜ்குமாருடனும் யமுனா நடித்துள்ளார். இதுதவிர யமுனா குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் துணை நடிகையாகவும், தெலுங்கில் எர்றமந்தாரம், மவுன போராட்டம் , மாமகாடு உள்பட பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நடிகை யமுனா, தகவல் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தி வரும் வேணுகோபால் என்பவருடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பிடிபட்டார். இதையடுத்து, நடிகை யமுனா, வேணுகோபால், இதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் சுரக்ஷித் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர் அவர்களை பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, யமுனாவையும், வேணுகோபாலையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி வெங்கடேஷ் குலகி உத்தரவிட்டார். மேலும் விபசார வழக்கு தொடர்பாக புரோக்கர் சுரக்ஷித்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டதன் பெயரிலும், அவரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
G.O STOCK FILE
-
[image: Rounded Rectangle: இருப்புக்கோப்பு - 2026]
*அரசு ஆணைகள் **மற்றும் அரசுக் கடிதம்*
[image: Rounded R...
No comments:
Post a Comment
http://tv-actors.blogspot.com/